உள்நாடு

பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு

(UTV|மட்டக்களப்பு) – மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

வவுணதீவில் உள்ள மூன்றாம் கட்டை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் அடிகாயங்களுடன் இன்று (06) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸார் அடித்துக் கொலை செய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ள வவுணதீவு பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Related posts

தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

‘ஜனாதிபதி பதவி விலகல்’ : ஜனாதிபதியின் ஊடகத் தொடர்பாளர் மறுப்பு

ஐயாயிரம் ரூபா மேன்முறையீடுகள் குறித்து பரிசீலனை