வணிகம்

மஹவ – வவுனியா ரயில் பாதையை மறுசீரமைக்க திட்டம்

(UTV|கொழும்பு) – கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் பாதையில் மஹவ தொடக்கம் வவுனியா வரையிலான ரயில் பாதையை மறுசீரமைப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையிலான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 2 ரயில் பெட்டிகள் விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இவை தற்பொழுது பரீட்சார்த்தமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களத்தின் தலைமைப் பொறியியலாளர் கே.டி.எஸ. பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த 2 ரயில் பெட்டிகளும் மலையக ரயில் பாதையில் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை – பங்களாதேசம் முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கை

சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களின் விலைகள் குறைப்பு

ஜப்பான், அபிவிருத்தித் திட்டங்களுக்காக 4 பில்லியன் ரூபா நிதியுதவி