உள்நாடு

சஜித் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூட்டம்

(UTVNEWS | COLOMBO) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளார்.

குறித்த சந்திப்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணி குறித்தும் விவாதிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாஸ பங்கேற்புடன் சிறப்பு கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

BOI இன் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசா சலுகைகள்

எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயு குறித்து இன்று தீர்மானிக்கும்

பேரூந்து கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு