உலகம்

பாடசாலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் பலி

(UTV| கென்யா) – கென்யாவில் உள்ள பாடசாலையில் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியேறிய மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாடசாலை முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியேறி கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நெரிசலில் மாணவர்கள் பலர் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். மேலும் சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு விழுந்துள்ளனர்.

மேலும் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

கென்யாவில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், அங்கு பள்ளிகளின் பாதுகாப்புத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related posts

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

editor

ஸ்புட்னிக் லைட் அறிமுகம்

கொரோனாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் பிளேக் நோய்