உள்நாடு

மின்விநியோகத் தடை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

(UTV|கொழும்பு) – நாட்டின் சில பகுதிகளில், முன்அறிவித்தலின்றி சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின் விநியோகத் தடை ஏற்பட்டமை தொடர்பில் மின்சக்தி துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை மின்சார சபையிடம் அறிக்கை கோரியுள்ளார்.

நேற்று முன்தினம் நாட்டின் சில பாகங்களில் மின்விநியோகம் தடைசெய்யப்பட்டது.

கெரவலப்பிட்டிய மின்நிலைய மின் பிறப்பாக்கி​யின் செயற்பாடுகளுக்கு போதுமான அளவு எரிபொருள் இல்லாதமையால் மின்சார விநியோகத்தை துண்டித்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.

மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும். எனினும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமைக்கு இவ்வாறான அனுமதி எதுவும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்சார விநியோகத்தைத் துண்டிக்கக்கூடாது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

இதுவரையில் 2,816 பேர் பூரண குணம்

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல் முதலிடம் -ஜனாதிபதி!

பேருந்து கட்டணம் குறித்து நாளை தீர்மானம்