உள்நாடு

இன்று விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

(UTV|கொழும்பு) – 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்துள்ள வீதிகளில் இன்று (04) காலை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளாஸ் ஹவுஸ் சந்தியிலிருந்து நந்தா மோட்டர்ஸ் வீதி திசையில் பிரவேசித்தல், பொதுநூலக சந்தியில் கிளாஸ் ஹவுஸ் பகுதி ஊடாகவும் ஆனந்தகுமாரசாமி மாவத்தைக்குப் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தர்மபால மாவத்தையிலிருந்து F.R. சேனாநாயக்க வீதிக்குள் பிரவேசிப்பதற்கும் விஜேராம மாவத்தையில் ரொஸ்மிட் பிளேஸ் ஊடாக கன்னங்கர மாவத்தைக்குள் பிரவேசிப்பதற்கும் இன்று காலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தவிர, பௌத்தாலோக மாவத்தையிலிருந்து மெட்லன்ட் பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதற்கும் பிரேம கீர்த்தி டி அல்விஸ் மாவத்தைக்குள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் – ஒருவர் காயம்

editor

சுதந்திரம் யாருக்கோ என எண்ணுமளவில் சிறுபான்மையினர் : ரிஷாத்

அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா