உள்நாடு

புதுக்குடியிருப்பு பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு

(UTVNEWS | MULLAITIVU) – முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் குண்டுகள் மீட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் 81 மில்லி மீற்றர் கொண்ட 13 பெட்டிகளை மீட்டுள்ளனர்.

குறித்த வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருந்த நிலத்தின் உரிமையாளர் இது தொடர்பில் தகவல் அறிந்து பொலிஸாருக்கு வழங்கிய உத்தரவுக்கு அமையவே முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இவை மீட்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்க்கப்பட்ட பல பெட்டிகள் சிதைவடைந்த நிலையில் இருந்ததாகவும், அவை விடுதலை புலிகளினால் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

KDU திருத்த சட்ட மூலம் வெள்ளியன்று சமர்ப்பிக்கப்பட மாட்டாது

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து!