உள்நாடு

எல்ல காட்டுப் பகுதியில் தீ

(UTV|பதுளை) – எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலஅல்ப கொடமடித்த காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ தொடர்ந்து இரண்டு நாட்களாக பரவிவருகின்றது.

இந்தத் தீயினால் 7 ஏக்கரிற்கு மேற்பட்ட பகுதி எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் இன்று (03) தெரிவித்தனர்.

தற்போது இப்பிரதேசங்களில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் கடும் காற்று வீசுவதனால் தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

தற்போது பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நீர்ப்போசன வனப் பிரதேசங்களுக்கு தீ வைப்பதனால் மேலும் நீர்த்தட்டுப்பாடு ஏற்படும் எனவும் யாரும் இவ்வாறு தீ வைத்திருந்தால் அவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டுமெனவும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.

Related posts

தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

சிறைச்சாலைகளில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா

தீர்வின்றேன் திங்கள் முதல் தனியார் பேரூந்துகள் இல்லை