விளையாட்டு

நியூசிலாந்து அணியை வைட் வோஷ் செய்தது இந்தியா அணி

(UTV|நியூசிலாந்து) – இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டீ-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை இந்திய அணி ‘வைட் வோஷ்’ செய்து சாதனை படைத்துள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவதும் இறுதியுமான டீ-20 போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று இடம்பெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்தது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 60 ஓட்டங்களையும், கே.எல்.ராகுல் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதனால் இந்தியா 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை வயிட் வோஷ் செய்து சாதனைப் படைத்தது இந்தியா.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகன் விருதை வென்றார். லோகேஷ் ராகுல் தொடரின் நாயகன் விருதை வென்றார்.

Related posts

இந்தியாவிற்கு பயணிக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு ‘விசா’

இலங்கையின் வேகப்பந்தின் நிலை தொடர்பில் தென்னாபிரிக்காவை கதிகலங்க வைத்த விஷ்வ

249 ஓட்டத்துடன் சுருண்ட நியூஸிலாந்து