(UTV|சீனா) – சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அப்பிள் நிறுவனமானது சீனாவில் உள்ள தனது அனைத்து பிரதான அலுவகங்களளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
வுஹானில் கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச நாடுகள் தற்போது அவதானமாக செயல்பட்டுவரும் நிலையிலேயே அப்பிள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை தனது அனைத்து அலுவகங்களையும் மூடவுள்ளதாக அப்பிள் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ள அதேவேளை வெகு விரைவில் தனது அலுவகங்களை திறக்குமெனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வாரத்தில் மட்டும் சீனாவில் தனது மூன்று அலுவகங்களை தற்காலிகமாக முடிவுள்ளதாக அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.