கேளிக்கை

தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி முறைப்பாடு; இதை செய்தாரா?

(UTV|இந்தியா) –பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி சென்னை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தர்ஷன் உலக புகழ் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் கடைசி வரை வந்த தர்ஷன் வெற்றியாளராவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த வாய்ப்பு முகெனுக்கு கிடைத்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் தர்ஷனுக்கு வாய்ப்பு வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சமயத்தில் தர்ஷன் குறித்து வீடியோ வெளியிட்ட ஷனம் ஷெட்டி, “என்னால் தர்ஷனின் பிக்பாஸ் வெற்றி பறிபோவதாக பேசுகின்றனர். அதனால் இனி நான் தர்ஷனைப் பற்றி பேசப்போவதில்லை. என் வாழ்வில் அவர் இல்லை” என்று கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேரடியாக புகார் அளித்துள்ளார் ஷனம் ஷெட்டி. பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ஷனம் ஷெட்டி, “கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்து ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நேரத்தில் சினிமா நடிகர்களையும் தன்னையும் இணைத்து தவறாகக் கூறி திருமணத்தை நிறுத்தினார் தர்ஷன். இதனால் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. எனது குடும்பமே மன உளைச்சலுக்குள்ளானது. என தெரிவித்தார்.

 

Related posts

ஒஸ்கார் விருதுக்கு குஜராத்தி படமான ‘செல்லோ சோ’ பரிந்துரை

கதாநாயகியாக அறிமுகமாகும் கல்பனாவின் மகள்

கல்யாணம் கட்டிகிட்டு ஓடிப்போலாமா என்று த்ரிஷாவிடம் கேட்ட ஆர்யா