உள்நாடு

இலங்கை அரசுக்கு மியன்மார் வேண்டுகோள்

(UTV|கொழும்பு)- தமது நாட்டினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட யானை ஒன்று துன்புறுத்தப்படுவதை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, மியன்மார் நாட்டின் வெளியுறவு அமைச்சு இலங்கைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக, இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள விகாரை ஒன்றுக்கு வழங்கப்பட்ட குறித்த யானை, துன்புறுத்தப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்தே, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சமய நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்காக குறித்த யானை விசேடமாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் மியன்மார் வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

100 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் 12 ஆயிரம் யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருந்தாலும், தற்போது 7 ஆயிரம் யானைகளே இலங்கையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

BWIO- USA சர்வதேச விருது: சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக அமேசன் கல்வி நிறுவனம் தெரிவு

“அருள் நிறைந்த புனித ரமழானின் பாக்கியம் சகலருக்கும் கிடைக்கட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!