(UTV|ரஷ்யா ) – கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவுடனான தனது எல்லையை மூடுவதாகவும், சீன நாட்டினருக்கு மின்னணு வீசா வழங்குவதை நிறுத்தப்போவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சீனாவுடனான எல்லையை ரஷ்யா மூடுகிறது. இதற்கான உத்தரவில் ரஷ்யப் பிரதமர் மிகைல் மிஷுஸ்ரின் கையெழுத்திட்டுள்ளார்.
எமது நாட்டு மக்களைப் பாதுகாக்க நாம் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று ரஷ்யப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்குப் பயணம் செய்வதைத் தவிர்ப்பதுடன் சீனாவில் உள்ள ரஷ்யர்கள், ரஷ்ய தூதரகத்துடன் தொடர்பு கொள்ளவும் என்று வெளியுறவு அமைச்சகம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள் எவரும் இல்லை. எனினும் ரஷ்ய அரசாங்கம் அதன் பரவலைத் தடுக்க ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது.