உள்நாடுசூடான செய்திகள் 1

கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு திடீர் வைரஸ் [VIDEO]

(UTVNEWS | BADULLA) – பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன.

சுமார் 100 பேரும்  இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கு கொட்டகலை, டிக்கோயா கிளங்கள் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது என்றும் மருத்துவ அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் சிலருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி மாணவர்கள் எவ்வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்பதை கண்டறிவதற்காக இரத்த, சிறுநீர் மாதிரிகள் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்தவுக்கு அழைப்பு

’22’ இற்கு உதவக் காரணத்தை சொன்ன சஜித்

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்