(UTVNEWS | COLOMBO) –ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட சாமிமலை கவரவில தமிழ் மகாவித்தியாலயத்தின் அதிபர் உட்பட மேலும் ஒரு ஆசிரியரை உடன் இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி மாணவர்களும், பெற்றோரும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் அதிபருக்கும், ஆசிரியருக்கும் உள்ள தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக குறித்த ஆசிரியர் நேற்று நஞ்சருந்தி தற்கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார். இதனால் பாடசாலைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், அதிபர் இப்பாடசாலைக்குவந்து மூன்றாண்டுகள் கடந்தாலும் பாடசாலையின் வளர்ச்சிக்காக உரிய பங்களிப்பை வழங்கவில்லை என்றும், தனிப்பட்ட தேவை, விருப்பங்களை பூர்த்தி செய்யும் நடவடிக்கையிலேயே இறங்கியுள்ளார் எனவும் தெரிவித்தனர்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கவரவில தமிழ் மகாவித்தியாலயத்தின் அதிபரிடம் வினவியபோது, இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியின்றி என்னால் எவுதும் கூறமுடியாது என தெரிவித்தார்.