உள்நாடு

டயர் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

(UTV|கொழும்பு) – ஹொரண பகுதியில் டயர் தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு(30) தீ பரவல் ஏற்பட்டுள்ளது

ஹொரண நகர சபையின் தீயணைக்கும் படையினரும், பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

இந்த தீ விபத்து சம்பவத்தால் எந்த வித உயர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவர தீர்மானம்

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்

IMF உதவியைப் பெற அமைச்சரவை இணக்கம்