கேளிக்கை

மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பிய சிம்பு

(UTV|இந்தியா) – நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்த நடிகர் சிம்பு, மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான செக்கசிவந்த வானம் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், நடிகர் சிம்பு மஹா படத்திற்காக ஹன்சிகாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பில் சிம்பு ஹன்சிகாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் மஹா படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.

Related posts

கனடா தொழிலதிபருடன் விரைவில் திருமணம்?

காலா படத்துக்கு சமூக வலைதளங்களில் பெருகும் ஆதரவு

ஆர்யாவின் ‘Teddy’ ஓடிடி தளத்தில்