உலகம்

கொரோனா வைரஸிற்கு நிகரான புதிய வைரஸ் கண்டுபிடிப்பு

(UTV|அவுஸ்திரேலியா) – உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சமமான வைரஸ் ஒன்றினை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த வைரஸ் கொரோனாவுக்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதென உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இதே போன்று சீன விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்த நிலையில் தற்போது அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் குறித்த முயற்சியில் வெற்றியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை வழங்கும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தற்போது ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு இதற்கான மருந்தை இவர்கள் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அதை கொரோன வைரஸ் தொற்றுக்கும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள்

கொரோனா அச்சுறுத்தல் – தாஜ்மஹால் மூடப்பட்டது

சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று!