உலகம்

சீன எல்லையை மூடியது மொங்கோலியா

(UTV|மொங்கோலியா) – சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அந்நாட்டுடனான எல்லையை மொங்கோலியா மூடிவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொங்கோலியாவில் பாடசாலைகள், கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தங்கள் நாட்டில் பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து நாடுகளுமே தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில் சீனாவின் அண்டை நாடான மொங்கோலியா தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் ஊடுருவிடக் கூடாது என்பதற்காக சீனாவுடான எல்லையை மூடிவிட்டது.

Related posts

இடிபாடுகளுக்கு இடையே இதயத் துடிப்பை தேடும் மீட்புப் படையினர்

PakVac தடுப்பூசியின் செயல்திறனில் முனேற்றம்

கனடாவின் முக்கிய நகரை விட்டு பலர் வெளியேற- காரணம் என்ன?