உலகம்

லண்டன் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

(UTV|லண்டன்) – வங்கிக் கடனுக்கு ஈடாக, தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்பதற்கு லண்டனிலுள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளுக்கு 9,000 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ளதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

இதனால் அவர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அதனைத் தொடர்ந்து அவரை நாடு கடத்தி வருவது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ‘எங்களிடம் வாங்கிய கடனுக்கு ஈடாக, மல்லையாவின் சொகுசுப் படகை விற்க அனுமதிக்க வேண்டும்’ என மேற்கு ஆசிய நாடான கட்டாரின், கட்டார் தேசிய வங்கி, லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சொகுசுப் படகை விற்பதற்கு அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஊழியர்களின் பணி நாட்களை குறைத்தது ஐரோப்பா!

சீனாவில் மக்கள் தொகையில் வீழ்ச்சி!

பேருந்து விபத்தில் 27 பேர் பலி – 20 பேர் காயம்