உள்நாடு

புஸ்ஸலாவில் திடீர் தீ விபத்து

(UTVNEWS | COLOMBO) –புஸ்ஸலாவ பகுதியில் நேற்று மாலை திடீர் தீ விபத்தில் அச்சகம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச பொது மக்கள், இளைஞர்கள் ஆகியோர் இணைந்து ஏனைய கடைகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

நிழல் உலக தாதா’வின் விசாரணைகளில் துரிதம்