உள்நாடு

சீனாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப நடவடிக்கை

(UTV|கொழும்பு) – சீனாவில் உள்ள இலங்கையர்கள் சிலரை இந் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேஜிங் தலைநகரத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தின் வர்த்தக அலுவல்கள் தொடர்பான தலைமை அதிகாரி எலக்ஷி குணசேகர இது தொடர்பாக தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் பரவாத இடங்களில் உள்ள இலங்கையர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக தெரிவித்தார்.

இலங்கை மாணவர்களுக்கும் அங்குள்ள 35 தொடக்கம் 40 இலங்கையர்களும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சீன அதிகாரிகள் நகரத்தினுள் பிரவேசிக்கவோ அல்லது நகரத்தில் இருந்து வெளியேறவோ அனுமதி வழங்கவில்லை.

இது தொடர்பாக நாம் சீன அதிகாரிகளிடம் கலந்துரையாடினோம். இவர்களை வீடுகளில் இருக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமாக சேவை இல்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த ஏற்பாடு!

நீரில் மூழ்கி உழவு இயந்திரம் விபத்து – காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு

editor

வௌ்ளவத்தையில் நிலம் தாழிறக்கம்!