உள்நாடு

இலங்கைப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்கம்

(UTV|கொழும்பு) – இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கொரோனா வைரஸ் அறிகுறி தொடர்பாக இத்தாலியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

63 வயதான இலங்கை பெண், இத்தாலியில் நேபிள்ஸ் நகரத்திலுள்ள கோட்டுக்னோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறினால் இத்தாலியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த செவ்வாயக்கிழமை இலங்கையில் இருந்து இத்தாலிக்குச் சென்றிருந்த நிலையிலேயே அவருக்கு நோயின் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் – ஒத்திவைப்பு விவாதம் அடுத்தவாரம்

ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார் – யஹம்பத்.

கொவிட் தடுப்பூசி நாட்டினை வந்தடைந்தது