(UTV|கொழும்பு) – தரமான ஒரு கிலோ கிராம் நெல்லை 50 ரூபாய் என்ற உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய நெல்லை கொள்வனவு செய்யும் இடத்திற்கு கொண்டு வரும் போது நெல் தொகையின் அதிகபட்ச ஈரப்பதம் 14 சதவீதமாக காணப்பட வேண்டும்.
அத்துடன் அதிகபட்ச கிண்ண அளவு 9 சதவீதமான தரமான நிலையில் இருக்க வேண்டும்.
இந்த வரம்பை மீறும் நெல் தொகை 44 ரூபாவிற்கே கொள்வனவு செய்யப்படும்.
அத்துடன் பிரதேச செயலகம் ஊடாக கொள்வனவு செய்யப்படும் நெல் தொகைக்காக குறித்த விவசாயின் பெயரில் பெறுமதி குறிப்பிடப்பட்டு கட்டண சான்றிதழ் விநியோகிக்கப்படும்.
1 முதல் 3 ஏக்கருக்கு இடையிலான ஒரு கிலோ கிராம் நெல் தொகை 3 ஆயிரம் ரூபாவிற்கும் 3 முதல் 5 ஏக்கருக்கு ஒரு கிலோ கிராம் நெல் தொகை 5 ஆயிரம் ரூபாவிற்கும கொள்வனவு செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த முறை பெரும்போகத்தில் 20 லட்சம் மெற்றிக் டொன் நெல் தொகையை கொள்வனவு செய்யலாம் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.