உள்நாடு

பாகிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை விஜயம்

(UTV|கொழும்பு) – பாகிஸ்தானின் கடற்படை தளபதி அட்மிரல் சபார் மஃமூட் அப்பாஸி இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வாவின் அழைப்பிற்கு அமைய இலங்கை விஜயம் மேற்கொள்ளும் அவர் 5 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருக்க உள்ளார்.

இதன்போது, கடற்படை, இராணுவம், விமானப்படை ஆகியனவற்றின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை, பாகிஸ்தானின் கடற்படை தளபதி சந்திக்கவுள்ளார்.

அத்துடன், பிரதமரையும் அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

நாடளாவிய மின்சாரத்திற்கு நாளைய கதி என்ன?

மேல் மாகாணத்தில் 188 பேர் கைது

செப்டம்பர் மாதம் முதல் விசேட ரயில் – பேரூந்து சேவைகள்