விளையாட்டு

பாகிஸ்தான் அணி 5 விட்டுக்களினால் வெற்றி

(UTV|பாகிஸ்தான்) – சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விட்டுக்களினால் வெற்றிப்பெற்றுள்ளது.

லாகூரில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

அதற்கமைய முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் மொஹமட் நைய்ம் அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்திருந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் சொயிப் மலிக் ஆட்டமிக்காமல் 58 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

இதற்கமைய மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 தொடரில் பாகிஸ்தான் அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

Related posts

தென்னாபிரிக்கா அணியானது நாணய சுழற்சியில் வெற்றி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்க் கொண்டு வெற்றியை ருசித்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி