உள்நாடு

சானி அபேசேகரவுக்கு எதிரான விசாரனை காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியுமான சானி அபேசேகரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நடத்திய தொலைப்பேசி உரையாடல்கள் குறித்து விசாரணை நடத்தி அது குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சமர்பிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு, பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவிற்கு கடந்த எழாம் திகதி உத்தரவிட்டது.

எனினும் குறித்த அறிக்கையை சமர்பிக்க மேலும் கால அவகாசம் தேவை என பதில் பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டதற்கு அமைய பொலிஸ் ஆணைக்குழு மேலும் இரண்டுவார கால அவகாசத்தை வழங்கியுள்ளது

Related posts

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை..!

யுகதனவி அடிப்படை மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

MTFE SL நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!