(UTV|சீனா) – உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதேவேளை, சீனா முழுவதும் 1287 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 80 வயதை தாண்டியவர்கள் என சீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு, வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க, அந்நாட்டில் விரைவாக புதிய மருத்துவமனை ஒன்றை அமைக்க அந்நாட்டு அரசு தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது.
மேலும், புதிதாக அமைய உள்ள இந்த மருத்துவமனை 10 நாட்களுக்குள் 25,000 சதுர மீட்டரில் 1,000 படுக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மனிதர்களின் சுவாச உறுப்புகள் மூலமே இந்த வைரஸ் பெரும்பாலும் பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.