(UTV|கொழும்பு) – ஓய்வுபெற்ற பிரதி திறைசேரி செயலாளர் எஸ்.பி.திவாரத்ன தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் பல்வேறு துறைகளை பிரதநிதித்துவபடுத்தி 12 உறுப்பினர்கள் நியமிக்கபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட மற்றும் நகரில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் திறமைகள், விசேடத்துவம் மற்றும் அவர்களின் பலவீனங்கள், அவர்களுக்குள்ள சவால்கள் ஆகியன தொடர்பில் சரியான முறையில் மதிப்பீடு செய்யாமை வறுமைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல் ´சுபீட்சத்தின் நோக்கு´ அரசாங்கத்தின் கொள்கைக்கமைய ´பாதுகாப்பான நாடு´ ´செழிப்பான தேசம்´ ´பயனுள்ள குடிகள்´ ´மகிழ்ச்சியான குடும்பம்´ ஆகிய தொனி பொருட்களின் கீழ் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த செயலணியின் விவேகம் மற்றும் நம்பக தன்மையின் அடிப்படையிலான செயற்றிட்டத்திற்கு உரிய பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது