(UTV|கொழும்பு) – சீனாவில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்திற்கொண்டு வைரஸ் தாக்கியுள்ள வூனான் மாகாணத்தில் வாழும் இலங்கையர்களை தெளிவூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் அது குறித்த தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளார்.
வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வூனான் நகரில் அமைந்துள்ள பல்கலைகழகம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த 30 மாணவர்கள் கல்வி கற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைரஸ் பரவல் அதிகரிக்கின்றமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சும், சீனாவில் உள்ள இலங்கை தூதரகமும் விழிப்போடு உள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது