உள்நாடுசூடான செய்திகள் 1

ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல்

(UTV|கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன கைது செய்யப்பட்டு, எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(24) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவை இன்றைய தினம் (24) கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நேற்றைய தினம் (23) அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் நீதவான் திலிண கமகேவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கு ஒன்று தொடர்பில் கடந்த தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்ததன் ஊடாக நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை கல்வி வரலாற்றில் முதற் தடவையாக தரம் 01 தரம் 02 மாணவர்களுக்கு ஆங்கில பாட புத்தம் அறிமுகம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்தவின் பெயர் பரிந்துரை

‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம்; முஸ்லிம் எம்.பிக்களின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள்’ – ரிஷாட் எம்.பி கோரிக்கை