(UTV|கொழும்பு) – கடந்த 2008-2009 ஆம் ஆண்டில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பிரதிவாதிகளுக்கும் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் ‘அட்மிரல் ஒப் த ப்ளீட்’ ஆக பதவி உயர்வு பெற்ற வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 13 கடற்படை அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கடந்த 22ம் திகதி உத்தரவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.