(UTV|அமெரிக்கா) – தமது பொருளாதாரத் தடையை மீறி மில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதியான எண்ணெயை ஏற்றுமதி செய்ய உதவிய இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றுக்கும் சீனாவை தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றுக்குமே அமெரிக்காவினால் மேற்படி பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க நீதித்துறைக்கு உட்பட்டு குறித்த நிறுவனங்கள் கொண்டுள்ள சொத்துக்கள் முடக்கப்படுவதுடன், அமெரிக்க நிறுவனங்கள் குறித்த நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.