உள்நாடு

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(UTV|கொழும்பு) – ஊவா, கிழக்கு மற்றும் வடமத்தியமாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல், வடமத்திய, வடக்கு, மத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

ஐந்து மாவட்டங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை

புத்தாண்டு சம்பிரதாயங்களை பாதுகாப்பான முறையில் முன்னெடுக்கவும்

குண்டுவெடிப்பு திட்டம் எப்படி? அசாத் மௌலானாவின் மிக முக்கிய வாக்குமூலம் இதோ