விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணி வெளியேற்றம்

(UTV|கொழும்பு) – இளையோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வெளியேறியுள்ளது.

இதில் குழு ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இலங்கை அணி தனது முதல் லீக் போட்டியில் இந்தியா அணியை எதிர்கொண்டது. இதில் இலங்கை அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், நியூஸிலாந்து அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் இலங்கை அணி தோல்வியடைந்ததால், காலிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

இலங்கை அணி நாளை மறுதினம் நடைபெறும் போட்டியில், ஆறுதல் வெற்றிக்காக ஜப்பான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

16 அணிகள் பங்கேற்றுள்ள 13ஆவது இளையோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஏ.பி.சி.டி. என நான்கு குழுக்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. ஒரு குழுவில் நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த குழுவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், காலிறுதிக்கு தகுதி பெறும்.

Related posts

பர்வீஸ் மஹரூபிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி

பாகிஸ்தான் T-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஸ்பான்சர் நிதியுதவி நிறுத்தம்

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 240