உள்நாடு

மருத்துவ சான்றிதழை பெற ஒன்லைன் ஊடாக முற்பதிவு

(UTV| கொழும்பு) – தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தினூடாக மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்கு ஒன்லைன் ஊடாக முற்பதிவு செய்வதற்கான புதிய செயற்றிட்டம் இன்று(22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

புதிய திட்டத்தினூடாக போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு செல்லாது, மருத்துவ அறிக்கையை பெறுவதற்கான தினத்தை ஒன்லைன் ஊடாக முற்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக கால வீணடிப்பு இல்லாது செய்யப்படும் என போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைமை வைத்தியர் K.S.M. சமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

www.ntmi.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் இந்த இணையளத்தளத்தினூடாக எதிர்வரும் 27 ஆம் திகதி தொடக்கம் முற்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என போக்குவரத்து மருத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

MV Xpress pearl : ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க கோரிக்கை

குருநாகலில் தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மட்டக்களப்பு, கிரான்குளத்தில் திடீர் தீ – முயற்சித்தும் கட்டுப்படுத்தமுடியவில்லை மக்கள் கவலை