(UTV|சீனா) – இன்டர்போலின் முன்னாள் தலைவர் மெங் ஹாங்வெய்யிற்கு 13 ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீன நீதிமன்றத்தினால் இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக நீண்டகாலம் சேவையாற்றிய அவர் பதவிக்காலத்தின் போது 2,90,000 அமெரிக்க டொலரை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச பொலிஸை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரத்தில் குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மெங் ஹாங்வெய் 2016ஆம் ஆண்டு இன்டர்போலின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
பிரான்ஸில் இருந்து சீனாவிற்கு சென்ற அவர் காணாமற்போனதைத் தொடர்ந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.