உள்நாடு

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|மட்டக்களப்பு) – புல்மோட்டை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் புல்மோட்டையில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றிற்கு சென்று, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் 5000 ரூபா நாணயத்தாள்களை மாற்றி தருமாறு கேட்டுள்ளார்.

குறித்த நாணயங்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட காரணத்தினால் குறித்த பாதுகாப்பு அதிகாரி நிதி நிறுவனத்தின் முகாமையாளருக்கு தகவல் வழங்கி பொலிஸாரிற்கு அறிவித்துள்ளார்.

குறித்த நபர்களிடமிருந்து 5000 ரூபாய் நாணயத்தாள்கள் 13 கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அமைச்சரவை தீர்மானங்கள் [2021-02-08]

 மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகள்