(UTV|இந்தோனேசியா) – இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் கவுர் நகரில் ஆற்றின் நடுவே புதிதாக பாலம் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பாலத்தின் மீது மாணவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ள நிலையில், இடிந்து விழுந்த பாலத்தோடு சேர்ந்து, அதில் நின்றவர்களும் ஆற்றுக்குள் விழுந்துள்ளனர்.
ஏற்கனவே பெய்து வரும் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது. இதனால் அதில் விழுந்தவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் பலர் மீட்கப்பட்ட நிலையில், 9 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தோனேசிய தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றமையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இந்த மாதத்தில் மட்டும் அங்கு 67 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.