(UTV|கொழும்பு) – அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழு மற்றும் அரச கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட குழுக்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று(21) சபையில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்தத் தெரிவுக் குழுவானது பாராளுமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட 17 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால.டி.சில்வா, தினேஷ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த சமரசிங்க, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, ரோஹித்த அபேகுணவர்த்தன, லஷ்மன் கிரியல்ல, ஜோன் அமரதுங்க, விஜித ஹேரத், ரிஷாட் பதியுதீன், பாட்டலி சம்பிக்க ரவணக்க, மனோ கணேசன், நிரோஷன் பெரேரா, மாவை சேனாதிராஜா ஆகியோர் குறித்த இந்தத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த 17 உறுப்பினர்களும் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான தெரிவுக்குழு உறுப்பினர்களாக செயற்படுவர்.
அந்தத் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் இன்று(21) பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.