(UTV|கொழும்பு) – புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான தூதுவர்கள் நால்வரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை இன்று (20) கையளித்துள்ளனர்.
இதன்படி கட்டார் நாட்டின் தூதுவர் ஜாஸ்ஸிம் பின் ஜாபிர் ஜாஸ்ஸிம் சரூர், துருக்கி குடியரசின் தூதுவர் ரகிபே டிமெட் செகெர்சியோக்ளு, லக்ஸம்பேர்க் நாட்டின் தூதுவர் ஜீன் க்ளோட் குகேனர், ஸ்லோவேனியா குடியரசின் தூதுவர் கலாநிதி மர்ஜன் சென்சென், பாகிஸ்தான் குடியரசின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கடாக் ஆகியோரே இவ்வாறு தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்
இலங்கையுடனான தமது நாடுகளின் நீண்டகால தொடர்புகளை புதிய துறைகளின் ஊடாக மென்மேலும் விருத்தி செய்வதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோமென புதிய இராஜதந்திரிகள் இதன்போது உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.