உள்நாடு

ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி CIDயில்

(UTV|கொழும்பு) – ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி ரணவக்க வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கொழும்பு குற்றவியல் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவுடன் சர்ச்சைக்குரிய வகையில் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து உரையாற்றியமை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

இதேவேளை, சர்ச்சைக்குரிய தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி தம்மிகா ஹேமபால ஆகியோரிடமும் கொழும்பு குற்றவியல் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்துக் கொள்ளவுள்ளது.

சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் குறித்து மேற்குறிப்பிட்ட நீதிபதிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் தம்புல டி லிவேரா கடந்த 16 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென தீர்மானம்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலுத் திட்ட 2ம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

பணம் அச்சிடப்பட்டதாக வெளியான செய்திகள் போலியானவை – விஜித ஹேரத்

editor