வணிகம்

சுமார் 9 வருடங்களின் பின்னர் வில்பத்துவின் நுழைவாயிகள் திறப்பு

(UTV|அனுராதபுரம்) – வில்பத்து தேசிய சரணாலயத்தின் தந்திரிமலை மற்றும் மஹவிலாச்சிய நுழைவாயில் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் வில்பத்து சரணாலயத்தில் புதிய பாலமொன்றை நிர்மாணிக்கவும், புதிய வீதிகளை அமைக்கவும் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சரணாலயத்தை சூழவுள்ள ஹணுவில, குகுல் கட்டுவ, முசிங்ககம மற்றும் கடுபத்கம ஆகிய 4 வாவிகளும் புனரமைக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 9 வருடங்களின் பின்னர் குறித்த நுழைவாயில் மீண்டும் திறக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் ஏற்றுமதிகள் மேலும் அதிகரிக்கும் நிலை

HNB AppiGo : வர்த்தக தளம் ஒருமாத குறுகிய காலத்திற்குள் மூன்று மடங்கு அதிகரிப்பு

பழ உற்பத்தி