(UTV|இந்தியா) – இந்திய அணியின் சாதனை அணித்தலைவராக திகழ்ந்த எம்எஸ் டோனி கடந்த ஆறு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் பிசிசிஐ-யின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
2020 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடக்கும்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது.
2020 ஐபிஎல் தொடரில் விளையாடினாலும், 2021 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் எம்எஸ் டோனி இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவாரோ? அல்லது மாட்டாரோ? என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 2021 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
எம்எஸ் டோனி ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.