உலகம்

பாதுகாப்பு சுவர் எழுப்ப ட்ரம்ப் எதிர்ப்பு

(UTV|அமெரிக்கா) – அமெரிக்காவின் நியூயோர்க் நகரை புயல் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க சுவர் ஒன்றை எழுப்பும் திட்டத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் நியூயோர்க் நகரை அடிக்கடி புயல் தாக்கி வருகின்றது. இதனால் இந்த பாதிப்புகளில் இருந்து அந்நகரை பாதுகாப்பதற்காக அமெரிக்க இராணுவ பொறியலாளர்கள் கடற்கரையில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள நியூயோர்க் துறைமுகம் பகுதியில் பெரிய சுவர் ஒன்றை எழுப்ப முடிவு செய்துள்ளனர்

இந்த திட்ட செயற்பாட்டிற்கு 11,900 கோடி அமெரிக்க டொலர்கள் தேவைபடுவதோடு இத்திட்டம் நிறைவடைய 25 ஆண்டுகள் ஆகும்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘புயல் தாக்குதல்களில் இருந்து நியூயோர்க் நகரை காப்பதற்காக அதனை சுற்றி 20 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்கள் மதிப்பில் பெரிய அளவிலான சுவரை எழுப்புவது என்பது அதிக பொருட்செலவு ஏற்படுத்தும்.

அது முட்டாள்தனமானது. இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு எதிரானது. இந்த திட்டம் எந்த வகையிலும் பயனளிக்காது. இது காண்பதற்கு பயங்கர தோற்றமளிக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை அமெரிக்க நாடாளுமன்றம்தான் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

கொரோனா வைரஸ்; இத்தாலியில் ஒரேநாளில் 133 பேர் பலி

தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

ட்ரம்ப் இனது YouTube கணக்கும் முடங்கியது