உள்நாடு

அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு அமுல்

(UTV|காலி )- நிலவும் வறட்சியுடனான வானிலை காரணமாக, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் R.H. ருவனிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காலி நகரில் அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் R.H. ருவனிஸ் கூறியுள்ளார்.

இதனால் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

வறட்சியுடனான வானிலை தொடர்ச்சியாக நிலவும் பட்சத்தில், அநுராதபுரம், கந்தளாய், பண்டாரவளை ஆகிய பகுதிகளுக்கான நீர்விநியோகமும் மட்டுப்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் ஹலீமுக்கு கொவிட் தொற்று

இந்நாட்டின் முன்னணி இந்திய வர்த்தகர்களுக்கு 5 வருட விசா

புதிய செயலாளராக எம்.டபிள்யூ.ஜகத் குமார பதவியேற்பு!