விளையாட்டு

புதிய ஆடம்பரக் காரை வாங்கிய விராட் கோலி [VIDEO]

(UTVNEWS | INDIA) – விராட் கோலி புதியதாக ஒரு ஆடி காரை வாங்கியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஆடி கியூ8 ஆடம்பர எஸ்யூவி கார் இந்த காரை இந்தியாவிலேயே முதன்முதலாக வாங்கியிருப்பவர் விராட் கோலி. ஆடம்பரமான எஸ்யூவி ரக காரான கியூ8, இதுவரை ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களில் மிகவும் விலை உயர்ந்த கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 3.0 லிட்டர் டர்போ ஃப்யூவெல் ஸ்டார்ட்டிஃபைடு இஞ்ஜெக்‌ஷன் கொண்ட எஞ்சின் உள்ளது. துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 6 விநாடிகளில் எட்டிப்பிடித்து விடும் இந்த கார், 340 பிஎச்பி பவர் மற்றும் 500 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.

நேற்று  இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கேப்டன் விராட் கோலி.

முன்னதாக, இந்த போட்டியில் பங்கேற்பதாக விமான நிலையத்திற்கு வந்தார் அவர் ஆடி கியூ8 காரில் வந்திறங்கியது தெரிய வந்தது. அதை தொடர்ந்து இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related posts

மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

அனர்த்தத்தினால் மெய்வல்லுனர் வீரர்கள் பலர் பாதிப்பு

ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து உஸ்மான் நீக்கம்