கேளிக்கை

விவசாயியாக வாழும் ஜெயம் ரவி

(UTVNEWS | INDIA) – கோமாளி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் ‘பூமி’. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட், போகன் போன்ற திரைப் படங்களை இயக்கிய லஷ்மண் இந்தப் படத்தையும் இயக்குகிறார். நித்தி அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

ஜெயம் ரவியின் 25 வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில் பூமி திரைப்படத்தின்  ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் 2020 மே 1ல், தொழிலாளர் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமி படத்தில் விவசாயியாக நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கிறார் என்பதை விட, அவர் ஒரு விவசாயியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் என, படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டர் வெளியான பின் படத்தின் இயக்குநர் லக்ஷண் தெரிவித்திருக்கிறார்.

Related posts

வாடகைத் தாய் மூலம் பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தை

கொரோனா யுத்தத்தை வேட்டையாடும் மாஸ்டர் விஜய் [VIDEO]

‘இந்நேரம் வேறு லெவலில் இருந்திருப்பேன்..’ – பூஜா