உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வருமாறு அழைப்பு

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அபுதாபி அரசின் முடிக்குரிய இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆயுதம் தாங்கிய படைகளின் பிரதித்தலைவர் ஷேக் மொஹமட் பின் சயிட் அல் நஹ்யன்  அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு அவர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த வேண்டும் என்ற தனது எதிர்ப்பார்ப்பினை உறுதிப்படுத்துவதோடு ஐக்கிய ராச்சியத்திற்கு வருகைதருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனா உறுதியளிப்பு

ஜனாதிபதி ஐ.நா பொதுச்சபையின் 76வது கூட்டத்தொடரில்

தனிமைப்படுத்தல் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவித்தல்