உள்நாடுசூடான செய்திகள் 1

சீனாவில் பரவிவரும் வைரஸ்; சுகாதார அமைச்சின் அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) – சீனாவில் பரவிவரும் அடையாளம் காணப்படாத வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அவதான நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் உனான் மாகாணத்தில் பரவரும் அடையாளம் காணப்படாத ஒருவகை வைரஸ் பரவல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த வைரஸ் கடந்த காலங்களில் சீனா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் பரவிய ´சார்ஸ்´ என்ற வைரசை ஒத்தது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் தாக்கத்தால் சீனாவில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் வைத்தியாசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த எச்சரிக்கை குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவ்வாறான வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இயல்பு வாழ்க்கை பாதிப்படையக்கூடாது

அமெரிக்க டொலர் நாணயத் தாள்களுடன் இருவர் கைது

பரிதாபமாக உயிரிழந்த மூன்று மாத குழந்தை!